மகா ஆருத்ரா தரிசனம்

🔱நமசிவாய 🔱
🔱சர்வம் சிவார்ப்பணம் 🔱
*****************************************
           🍁🍀மகாஆருத்ரா🍀🍁
       🍁(திருவாதிரை)தரிசனம்🍁 
*****************************************
பெளர்ணமியுடன்  கூடிய  மார்கழி 
மாதத்தில் வரும் திருவாதிரை
நட்சத்திர நன்னாளில் நடராஜ 
மூர்த்திக்கு நடைபெறும் அபிஷேக
வைபவமே ஆருத்ரா தரிசனமாகும்.
🌻அதிரை சிறப்பு 🌻
*********************
திருவாதிரை நட்சத்திரம் ஆருத்ரா, அர்த்ரா என்ற அழைக்கப்படுகிறது மேலும் திருவாதிரை 
நட்சத்திரமானது செந்நிறத்தையும், மூன்று கன்களையும், இரண்டு கைகளையும், சிவாலயதரிசனம்
ரிஷபத்தை வாகன மாகவும், ருத்திரனை அதிதேவதையாகக் கொண்டு உக்கிரமாக காணப்படும்  
இந்நட்சத்திரத்திற்கு  உகந்த ஸ்தலமாக காவிரி தென்கரை ஸ்தலமாக விளங்கும் 
திருவாதிரைப்பட்டினம் என்று அழைக்கப் பெற்ற  திருவாதிரையால்
பட்டினமுர் என்று  சுந்தரரால் இடையாற்று பதிகத்தில் வர்ணிக்கப் பெற்ற, அதிவிர ராமன் என்னும் பாண்டிய மன்னனின் பெயரில் அதிவிரராமன் பட்டினம் என்று 
அழைக்கப்பட்டு தற்காலத்தில் மருவி 
அழைக்கப்படுகின்ற அதிராமப்பட்டினம் 
எனும் ஊராகும்.
 
இருபத்துதெழு நட்சத்திரகளில் திரு என்று அரம்பமாகின்ற இரண்டு 
நட்சத்திரங்களில் ஒன்று திருவாதிரை 
மற்றொன்று திருவோணம்,
சிவாலயதரிசனம் ஆருத்ரா என்ற நட்சத்திரம்  தமிழ் மொழியில்  அதிரை  என்றும் திரு என்ற 
அடைமொழியுடன் (திரு +ஆதிரை) திருவாதிரை என்றும் இத்திருவாதிரை 
எம்பெருமானுக்கு  உகந்த நட்சத்திரம் என்பதால் அந்த நட்சத்திரத்தின் பெயராலே "அதிரையான்" என்று அழைக்கபடுகிறார்.

🌻ஆறுகால பூஜை🌻
***********************
வழங்கமாக எம்பெருமான் ஆலயங்களில்
ஆறுகால பூஜை  நடைபெறுவதை  போல 
தினந்தோரும் சிதம்பரம் நடராஜருக்கு ஆறுகால பூஜை நடைபெறுகிறது.
நடராஜர் என்றால் நம் நினைவிற்க்கு 
வருவது   ஆடல்  மற்றும் அபிஷேகமாகும்.
வருடத்தில் ஆறு நாட்கள் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் நடைபெறும்  
இந்த அபிஷேகத்தை  தேவர்கள்
மார்கழி  மாதத்தில் அதிகாலை  பொழுதில்  சிதம்பரம் நடராஜருக்கு
செய்கிறார்கள்.

🌻பஞ்ச சபைகள்🌻
**********************
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆருத்ரா தரிசனத்தை எம்பெருமான் நடனம் புரிகின்ற பஞ்ச சபைகளான
(சிவாலய தரிசனம்)கனகசபை  என்று அழைக்கபெறும் சிதம்பரத்திலும், வெள்ளிசபை என்கிறமதுரையிலும்,  ரத்தினசபை என்கிற
திருவாலங்காட்டிலும், தாமிரசபை என்கிற திருநெல்வேலியிலும், சித்திர சபை என்கிற குற்றாலத்திலும்  கானுதல்
மற்றம் விரதம் மேற் கொள்ளுதல்
சிறப்பாகும்.

🌻ஆருத்ரா அபிஷே காலம்🌻
********************************
ஆருத்ரா அபிஷேகமானது நள்ளிரவிலுருந்து அதிகாலை பொழுது  வரை நடைபெறும் அதிலும் குறிப்பாக திருவாலங்காடு  ரத்தினசபை  வடாரேண்யேஸ்வரர்  கோயிலில்  தொடர்ச்சியாக எழு  மணி   நேரம்  நள்ளிரவு  9 மணி  முதல் 
விடியற்காலை 4  மணி  வரை நடைபெறும்.அபிஷேகத்திற்கு  பிறகு  ஆடல்வல்லான் தருகின்ற காட்சியே 
ஆருத்ரா தரிசனமாக கருதப்படுகிறது .

🌻சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம்🌻
*****************************************
இந்த வருடம்  சிதம்பரத்தில்
மார்கழி  மாத அபிஷேகமானது  10-1-2020, மார்கழி-25, வெள்ளிக் கிழமை அதிகாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை  நடைபெறும். பின்னர் காலை 10 மணிக்கு சித்தசபையில் ரகசிய பூஜையும்,  சிவாலயதரிசனம் பஞ்ச மூர்த்திகள் உலாவந்த பின்னர்  மதியம்இரண்டு  மணிக்கு ஆருத்ரா தரிசனமும் ஞானகாச சித்சபா  பிறவெசமும் நடைபெறுகிறது.

சிவ அன்பர்கள் ஆருத்ரா தரிசனத்தை 
கண்டு  எம்பெருமான் அருள்
பெறுவோமாக.

நன்றி 
நமசிவாய 
 ராமச்சந்திரன் முத்துவேல்முருகன் 
R. Muthuvel Murugan
சிவாலயதரிசனம்  Sivaalaya Darisanam
Picture courtesy Face book friends
Thanks

Comments

Popular posts from this blog

கொண்டல் இறங்கி சிவன் மலை

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு பெருவிழா