நந்தி கல்யாணம் மற்றும் ஏழுர் பல்லக்கு-2020

🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
       🍀நந்தி கல்யாணம் மற்றும்🍀
  🍀ஏழுர் திருமண பல்லக்கு ஊர்வலம்🍀
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
 #சப்தஸ்தான_திருவிழா #ஏழுர்_திருவிழா.

ஒரு சமயம் திருவையாறு அடுத்துள்ள
திருமழபாடியில் அவதரித்த நந்திகேஸ்வரருக்கு, சுயம்பிராகாசையை 
திருவையாறு பஞ்சநதிஸ்வரர்  திடிரென  திருமணம்செய்துவைத்தார்.
இத்திருமணத்தை பார்க்காத
அருகிலுள்ள கோவில் தெய்வங்கள் நந்தி  திருமணத்தை  பார்க்கமுடிவில்லையே 
ஏன்று  தங்களுடைய அதங்கத்தை 
வெளிப்படுத்தும் பொருட்டு #நந்தி திருமணத்தை மீண்டும் காணவேண்டும் 
என்று இறைவனிடம்   முறையிட்டனர்.
அவர்கள் விரும்பிய வண்ணம் 
சிவபெருமான்  அம்பாள் மற்றும்  நந்தி அவரது மனைவி சுயம்பிராகாசையை  அழைத்துக்கொண்டு திருவையாறு, திருபழனம்,திருசோற்றுத்துறை,
திருவேதிகுடி, திருகண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்தானம், மற்றும் திருமழபாடி  ஆகிய ஊர்களை சேர்ந்தபல்லக்குகளுடன் ஒரு வலம்
வருவார். 
இந்த ஏழுர்  திருமண பல்லக்கு  வைபவ ஊர்வலமே #ஏழுர்திருமண_விழா  ஏன்று அழைக்கின்றனர்.இவ்விழா  திருவையாறை மைய்யமாகக் கொண்டு தொடங்குவதால்  #திருவையாறு
(எழுர்) சப்தஸ்தான திருவிழா ஏன்று 
அழைக்கப்படுகிறது.

🌻திருவையாறு 🌻
இங்கு  இறைவன் ஐயாரப்பர் சித்திரை  திருவிழா  12.ம் நாளன்று   எழூர் ஸ்தலங்களை வலம் வருவார்.
பெளர்ணமிக்கு  அடுத்த விசாக நட்சத்திரத்தில் அதிகாலை 
சுவாமி ,அம்பாளுடன் கண்ணாடி
பல்லக்கில் புறப்படுவார்.
நந்தி தன் மனைவி சுயம்பிரகாசையுடன் வெட்டி வேர், விளா மிச்சை பல்லக்கிலும் புறப்பட்டு  திரு பழனம் நோக்கி செல்வார்கள்.
இங்கு  புஸ்ப மண்டபம் தெரு , கீழை மட
விளாகம் ஆகிய இடங்களில் மண்டக
படிகள் நடக்கும்.

(1)🌻திருபழனம்  (காலை 10 மணி )
*********************************
திருபழனம்  சிவபெருமான்  
ஊர் எல்லைக்குச் சென்று பல்லக்கில்
வரும்பெண்-மாப்பிள்ளையுடன் வரும்  
ஐயாறப்பரை  எதிர்கொண்டு  
அழைப்பார். பூஜைக்கு  பிறகு  
திருசோற்றுத்துறை நோக்கி பல்லக்குகள் செல்லும்.

(2)🌻திருசோற்றுத்துறை🌻
இத்தல இறைவன் ஊர் எல்லைக்குப்
பல்லக்கில் வரும்  தெய்வங்களை 
வரவேற்று  வருவார். இங்கு உச்சிகால 
பூஜையுடன் , பல்லக்குடன் வந்தவர்களுக்கு விருந்து அளிக்கப்படும்.  பிறகு பல்லக்குகள் திருவேதிகுடி நோக்கி  புறப்பட்டு செல்லும்.

(3)🌻திருவேதிகுடி🌻
இத்தல  இறைவன் பல்லக்கில் வரும் தெய்வங்களை வரவேற்று அழைத்து வருவார்.இங்கு சயராட்சை பூஜை  முடிந்தவுடன் பல்லக்குகள் திருகண்டியூர் செல்லும்.

(4)🌻திருகண்டியூர்🌻
இங்கு பல்லக்கு  வந்தவுடன்
அலங்காரம் கலையப்பட்டு  நந்திக்கு 
மட்டும் அபிஷேகம் நடைபெறும்,பூமா லை  சாற்றப்படும். மேலும் சம்மந்திகளுக்கு  கட்டு சாதம் வழங்கப்படும்.  பிறகு  6 பல்லக்காக திருப்பூந்துருத்தி  நோக்கி  பல்லக்குகள்  செல்லும்.

(5)🌻திருப்பூந்துருத்தி🌻
இங்கு  திருஞானசம்பந்தரை,அப்பர்
வரவேற்று  உபசரித்தார் அதுபோல்
அப்பர் பல்லக்கு சுமந்து வருபவர்களை வரவேற்று உபசரித்தார்.இதனால்தான் இங்கு 🔱திருப்பூந்துருத்தி உபசாரம்🔱 என்ற பலமொழி வந்தது.

(6)🌻திருநெய்தானம் (தில்லை ஸ்தானம்)🌻
இங்கு இறைவனால் பல்லக்குகள்
வரவேற்க்கப்பட்டுநெய்அபிஷேகம் , வெந்நீர் திருமஞ்சனம் மற்றும்
வானவேடிக்கை நடைபெறும்.
பிறகு அனைத்து பல்லக்குகள்
திருவையாறு சென்று மிண்டும்
சொந்த ஊருக்கு  திரும்பி  செல்லும்.

🌻திருமழபாடி திருமணம் 🌻
அங்கிருந்து ஐயாரப்பர்  பல்லக்கு 
திருமழபாடி வந்தவுடன்  பொம்மை
பூப்போடும் நிகழ்ச்சி மற்றும் 
ஆலயத்துக்குள்பல்லக்கு  செ ல்லும் போது  பண்டாரகூத்து  எனும்
அசைவு ஆட்டம் நடைபெறும்.
இரவு 9 மணியளவில் திருமணம்
இனிதே  நடைபெறும்.
அனைவரும் இந்த தெய்விக
திருமணத்தை  தரிசித்து இறைவன் 
அருள் பெறுவோம் , திருமணயோகம்
பெறுவோம். 
அன்புடன்
இராமச்சந்திரன் முத்துவேல்முருகன்.
#சிவாலய_தரிசனம்
நன்றி 
நமசிவாய

நந்திகேஸ்வரர்,சுயம் பிரகாசை

Comments

Popular posts from this blog

மகா ஆருத்ரா தரிசனம்

கொண்டல் இறங்கி சிவன் மலை

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு பெருவிழா