மாசிமகம்
🔱நமசிவாய 🔱
🔱சர்வம் சிவார்ப்பணம் 🔱
********************************************
🍀நாளை🍀
🍁மாசிமகம் தீர்த்தவாரி 8-3-2020🍁
********************************************
நீர்நிலைகளின் மேன்மையையும்,
புனித நீர்நிலைகளில் நிராடுதலின் மகத்துவத்தையும் வெளிப்படுத்துவதே
மாசிமக வைபவமாகும்.
அந்தவகையில் உள்ளத்தோடு உடலையும் துாய்மை படுத்த ஸ்தலங்களை தரிசிப்பதோடு
ஸ்தல தீர்த்தங்களில் பக்தியோடு நீராடினால் தோஷங்கள் நீங்கி வாழ்வில் மேன்மை அடையலாம் என்பது நிதர்சனம்.
தமிழ் மாதங்களில் ஐப்பசி நிராடல்,தை நிராடல்,மார்கழி நிராடல் போன்ற நிராட்டல் நிகழ்வில் பங்குகொள்வது
நலம் பயக்கும்.அந்தவகையில் அறிந்தும் அறியாமலும் செய்த பாவச் சுமைகளை நீக்கி புனிதம் பெற
🍁இளையமகாமகம்🍁
*************************
நிகழும் மங்களகரமான விகாரிடம் மாசி மாதம்-25,8-3-2020, ஞாயிற்று கிழமை , மாசி மாத மக நட்சத்திர தினத்தன்று
கும்பேஸ்வரர் மகாமக குளம் உள்ளிட்ட
சகல சிவாலய தீர்த்தங்களில்
காலை 10.15 மணி முதல் 12,45 வரை நிகழக்கூடிய "இளைய மகாமகம் " என்றுஆழைக்கப்பெறும்"மாசிமக"தீர்த்த வாரியான"கடலாடும் விழாவில் " நீராடுவது பெரும் பெறு நல்கும்.
வானுட சாஸ்திர ரீதியாக கும்பராசியில்
சூரியன் பிரவேசிக்க, மக நட்சத்திரத்தில்
சந்திரன் சஞ்சரிக்கும் பெளர்ணமியுடன்
கூடிய நன்நாளே மாசிமகமாகும்.
இன்நன்நாளில் ஆறு, கடல், குளம்
போன்ற நீர் நிலைகளில் அமிர்தம் நிறைந்து இருப்பதாக கருதப் படுகிறது .
இன் நன்நாளில் புனித ஸ்தலங்களை தரிசிப்பதும்,புனித நீர் நிலைகளில் நீராடுவதும் தோஷம் நீக்கும் புனித நாளாக கருதப்படுகிறது.
🍁மாசிமக வைபவம்🍁
************************
மாசி மாத தீர்த்த வாரியை முன்னிட்டு
தொடர்ந்து பத்து நாட்கள்
கொடியேற்றத்துடன் ,ஒலை சப்பரம்,
தேரோட்டத்துடனாகிய உற்சவம் நடைபெறும்,பிறகு மகத்தன்று சுவாமி மற்றும் அம்பாளை அலங்கரித்து,சிவ சக்தி மூர்த்தங்களுடன் பல்லக்கில் இடம்பெறச் செய்து ஆறு,கடல்,குளம் போன்ற தீர்த்த நிலைகளுக்கு ஊர்வலமாக அழைத்துச்சென்று எழுந்தருளச் செய்வார்கள், அங்கு எம்பெருமானுக்காக அஸ்திர மூர்த்தியை நிராடச் செய்வார்கள் அப்பொழுது பக்தர்களும் நிராடுவார்கள் இந்த
வைபமே "தீர்த்தவாரியாகும்", பின்பு "தீப ஆராதனை"செய்து குளிர்ச்சியான
பண்டங்களை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்கி ஸ்தலத்திற்குச் செல்வார்கள்.
🍁நீராடும் முறை 🍁
**********************
🌻மாசிமக நாளில் நீர் நிலைகளில் நீராடும்போது ஒற்றை ஆடையுடன்
நீராடக்கூடாது , பிரிதொரு அடையுடன்
நீராடவேண்டும்.
🌻 மேலும் தீர்த்த நிலைகளில்
"தர்பணம் "மற்றும் "பிதுர்கடன்" செலுத்துவதோடு,
🌻"அன்னதானம் "மற்றும் விரதம்
மேற்க்கொண்டால் சகல சௌபாக்கியங்களை
பெறலாம்.
🍁மாசிமக நீராடுதலின் பயன் 🍁
**********************************
🌻மாசிமக நாளில் நீர் நிலைகளில்
ஒரு முறை முழ்கி எழுந்தால் பாவங்கள்
விலகும்.
🌻இரண்டாம் முறை முழ்கி எழும்போது
தேவலோகத்தில் வீற்றிருக்கும் பலன்
கிட்டும்.
🌻மூன்றாம் முறை முழ்கி எழும்போது
எண்ணிலடங்கா புண்ணியப்பலனை
பெறலாம்.
🔅🍁🔅🍁🔅🍁🔅🍁🔅🍁🔅🍁🔅🍁�🔅�
**குறிப்பாக மாசிமகம் அன்று தீர்த்தவாரி யில் பங்குகொண்டு நீராடினால்🍀பித்ருதோஷம் 🍀உள்ளிட்ட சகல தோஷ நிவர்த்தியோடு சந்தான பாக்கியம் கிட்டும் தீர்த்தவாரியில் பங்குகொள்ள முடியாதவர்கள் அருகாமையில் உள்ள நீர் நிலைகளில் சுவாமி,அம்பாள் மற்றும் மூதாதயர்களை மானசிகமாக வணங்கி நீராடினால் பலன் கிட்டும் என்பது நிதர்சனம்.
🔅🍁🔅🍁🔅🍁🔅🍁🔅🍁🔅🍁🔅🍁�🔅�
🍁மாசிமகம் விரதம் இருக்கும் காலம்🍁
*****************************************
மகம் நட்சத்திரம் ஆரம்பிக்கும் நேரம்
7-3-2020,0 சனி அன்று ஆயில்யம் பின் இரவு 4,54 முடிய பிறகு மகம் ஆரம்பித்து
8-3-2020, ஞாயிறு பின் இரவு 3.31 வரை
நீடிக்கிறது
சிவ அன்பர்கள் மாசிமக தீர்த்த வாரியில்
பங்கு கொண்டு அன்னை பார்வதி சமேத
எம்பெருமான் அருள் பெறுவோமாக
நன்றி
நமசிவாய
ராமச்சந்திரன் முத்துவேல்முருகன்
R. Muthuvel Murugan
சிவாலய தரிசனம் SivaalsyaDarisanam
Comments
Post a Comment